Vijay Marriage

Vijay Marriage : அது என் தங்கச்சி பா என கூறி திருமணம் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

அதே போல் தமிழில் நோட்டா என்ற படத்தின் மூலமாகவும் அறிமுகமாகி தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தளபதி 63 கிளைமேக்ஸிற்காக போடப்பட்டுள்ள செட் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்.!

இவர் தற்போது தமிழில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்திருந்த நிஹாரிகாவின் சூரியகாந்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

தற்போது இது குறித்து இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் விஜய். நான் நிஹாரிகாவின் அண்ணனாக இந்த படத்திற்கு வந்துள்ளேன் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதே போல் நிஹாரிகாவும் நான் தொடர்ந்து படங்களில் நடிக்க போவதில்லை. சில படங்களில் நடித்து விட்டு அப்பாவிற்கு உதவியாக தயாரிப்பில் ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.

இதுவரை நிஹாரிகா தெலுங்குவில் மூன்று படத்தில் நடித்துள்ளார். இந்த மூன்று படமும் சரியாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

niharika-konidela

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.