Vijay devarakonda and Rashmika
Vijay devarakonda and Rashmika

Vijay devarakonda and Rashmika : அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

இந்நிலையில் இவர் தான் நடிக்கும் படங்களை தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டம் வகுத்தார்.

அந்தவகையில் இவர் நடித்துள்ள டியர் காம்ரேட் திரைப்படம் வரும் மே 31-ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அண்மையில் இப்படத்தின் டீசரும் வெளியாகியிருந்தது. இதில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் முத்தமிடும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே வெளியான கிசுகிசுவை உறுதிப்படுத்துவது போல் இந்த டீசர் இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா மிகுந்த வேதனையில் உள்ளாராம்.

தன்னால் ஒரு பெண் பிரச்னையில் சிக்கவேண்டாம் என முடிவெடுத்த அவர், இந்த காட்சியை படத்திலிருந்து நீக்கவும் ஆலோசித்து வருகிறாராம்.

Dear Comrade' Kiss

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.