சூர்யாவைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் தளபதி விஜய்.

Vijay Decision on Thalapathy65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதனையடுத்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

ஜூன் மாதத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கலாம் என தயாரிப்பு நிறுவனம் விஜயிடம் கூற அதற்கு தளபதி விஜய் இந்த கொரானா பேரிடர் காலத்தில் படப்பிடிப்புக்கு வர முடியாது என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யாவின் பாண்டிராஜ் படத்தில் நடித்து வரும் நிலையில் அவரும் தற்போது படப்பிடிப்பிற்கு வர முடியாது எனக் கூறிய நிலையில் விஜய்யும் அதே பதிலை கொடுத்திருப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.