Vijay Decision on Thalapathy 66
Vijay Decision on Thalapathy 66

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த மாஸ்டர் விநியோகஸ்தருக்கு உதவ முன் வந்துள்ளார் தளபதி விஜய்.

Vijay Decision on Thalapathy 66 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

நோ பாட்டு, நோ டான்ஸ்.. தளபதி மட்டும் போதும் விஜயை இயக்குவது குறித்து லோகேஷ் கனகராஜ் அதிரடி பேட்டி!

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார். உலகம் முழுவதும் இப்படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போய் வருகிறது.

இதன் காரணமாக இப்படத்தின் விநியோகஸ்தர் உரிமையை வாங்கியுள்ள தயாரிப்பாளர் லலித்குமார் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார்.

பைனான்ஸியருக்கு வட்டி கட்டி வருவதால் நாளுக்கு நாள் கடன் சுமை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதனை அறிந்த தளபதி விஜய் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு படத்தை கொடுக்க அவர் முன்வந்துள்ளார்.

லாக் டவுன் முடியட்டும் அப்புறம் கண்டிப்பா இது நடக்கும், விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வெளியான அதிரடி தகவல்!

மாஸ்டர் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் லலித் குமார் தயாரிப்பில் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜயின் இந்த முடிவு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ரசிகர்களும் தளபதி 66 படத்திற்காக மீண்டும் லலித் குமாருடன் இணைந்து இருப்பதை எண்ணி உற்சாகம் அடைந்துள்ளனர்.