Vijay Decision on Thalapathy 65 Salary
Vijay Decision on Thalapathy 65 Salary

தங்களின் சம்பள விவகாரத்தில் ரஜினி, விஜய் ஆகியோர் எடுத்த முடிவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay Decision on Thalapathy 65 Salary : கொரோனா வைரஸ் காரணமாக நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

சினிமாத்துறை ஒட்டுமொத்தமாக முடங்கி இருப்பதால் அதிலிருந்து மீண்டு வர நிச்சயம் அனைவரும் அவர்களின் பங்கேற்பை எதையாவது செய்தாக வேண்டும் என கூறி வருகின்றனர்.

இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்திற்காக தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொண்டுள்ளார்.

இந்த முறையாவது உண்மையாகுமா?? தளபதி 65 படத்தின் நாயகி இவர் தானா? – வெளியான அதிரடி தகவல்!

அண்ணாத்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க டி இமான் இசையமைக்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் மற்றும் பல இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அதேபோல் தளபதி விஜய்யும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்காக அவர் 100 கோடி சம்பளம் பேசியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

அதற்கு விஜய் சம்பளத்தை குறைக்க மறுப்பு தெரிவித்து விட்டதாக பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

பெரும்பாலான நடிகர்கள் தாங்களாக முன்வந்து தங்களது சம்பளத்தை குறைத்துக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.