கார் வரி விவகாரத்தில் தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு குறித்து தெரிய வந்துள்ளது

Vijay Decision on Car Tax Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் பல வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்து வாங்கிய ரோல்ஸ் காருக்கு முறையாக வரி செலுத்தி உள்ளார்.

மத்திய அரசுக்கு வரி செலுத்திய அவர் ஆர்டிஓ அலுவலகத்தை நாடிய போது தமிழக அரசிற்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் சில தமிழக கேரள அரசு வேலைக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியதில்லை என கூறியுள்ளனர்.

பாபர் அசாமா-இயான் மோர்கனா? இன்று, கலக்கப்போவது யாரு?

இதனால் அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர 20 சதவீத நுழைவு வழியை மட்டும் செலுத்தி விட்டு வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது. அதன்படி தளபதி விஜய்யும் செய்துள்ளார்.

Natty-யுடன் இணையும் Black Sheep இவள் நந்தினி – பூஜையுடன் துவங்கியது படப்பிடிப்பு! | Dream House

இப்படியான நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்ததுடன் மட்டுமல்லாமல் மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும் எனவும் கட்டளையிட்டது. மேலும் விஜய்யை நீதிபதி மிகவும் மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் தளபதி விஜய் மீதி உள்ள வரியை தான் கட்டுவதற்கு தயாராக இருப்பதாகவும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும், தனி நீதிபதி தன்னைப்பற்றி வைத்த விமர்சனங்களை நீக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்க்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.