விஜயின் அதிரடியான முடிவால் ரசிகர்கள் கொண்டாட்டம்.

ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் வாரிசு திரைப்படம் வெளியாக சிக்கல்கள் எழுந்துள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இனி மாதம் மாதம் கொண்டாட்டம் தான்.. தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு.!!

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் விஜய் இன்று தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார். சென்னை பனையூர் இல்லத்தில் சேலம், நாமக்கல் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக செய்தி வெளியான நிலையில், ரசிகர்களையும் சந்திக்க உள்ளாராம். அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் மாதம் ஒரு முறை ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் விஜய் மக்கள் இயக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் இந்த செய்தியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.