பள்ளி படிப்பை நிறைவு செய்துள்ள விஜய் மகளின் பட்டமளிப்பு விழா வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள் தற்போது வாரிசு திரைப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்திருக்கும் விஜயின் மகள் திவ்யாவின் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்று இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

அந்நிகழ்ச்சியில் சான்றிதழை பெற்றுள்ள திவ்யா தனது அண்ணன் ஜேசன் சஞ்சயிடம் அதனை வழங்கி வாழ்த்துகளைப் பெற்றுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. மேலும் திவ்யா தனது மேற்படிப்பை கனடாவில் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

YouTube video