Vijay Contribution to Fans
Vijay Contribution to Fans

வறுமையில் வாடும் ரசிகர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விஜய் பணம் அனுப்பி வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Vijay Contribution to Fans : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்காததால் இதற்கு ஊரடங்கு ஒன்றே சிறந்த வழி என ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் ரூபாய் 1.30 கோடி நிவாரண நிதியாக அளித்திருந்தார்.

ஒரே குஷி தான் போல.. வாயில வைக்க முடியல.. சன்னி லியோன் பற்றி அவரது கணவர் வெளியிட்ட வீடியோ.!

அதுமட்டுமல்லாமல் ரசிகர் மன்றங்களில் மூலமாக ரூபாய் 50 லட்சத்திற்கு உதவி செய்ததாகவும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வறுமையில் வாடும் தன்னுடைய ரசிகர்களை கண்டறிந்து அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக ரூபாய் ஐந்தாயிரம் அனுப்பி வைத்து வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் தனக்கு விஜயிடம் இருந்து பணம் வந்ததாகவும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.