வெங்கட் பிரபுக்கு தளபதி தளபதி விஜய் போட்ட கண்டிஷன் பற்றி தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாக உள்ள லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. படத்துக்கு தளபதி விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் செய்தி பரவியது. வெங்கட் பிரபு ஆன்லைன் ஸ்டோரி விஜய்க்கு பிடித்திருந்ததால் அவருக்கு கால் சீட் கொடுக்க முடிவு எடுத்துள்ளார்.

அதே சமயம் தளபதி விஜய் வெங்கட் பிரபுவுக்கு போட்டுள்ள கண்டிஷன் பற்றியும் தெரிய வந்துள்ளது. அதாவது இந்த படத்தை கூறி காலகட்டத்தில் குறிப்பாக 40 நாட்களுக்குள் முடித்து விட வேண்டும் என விஜய் கட்டளையிட்டுள்ளார்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.