Vijay Circle Clarify About Jackson Sanjay Health
Vijay Circle Clarify About Jackson Sanjay Health

விஜயின் மகனுடைய தற்போதைய நிலை குறித்து தெரிய வந்துள்ளது.

Vijay Circle Clarify About Jackson Sanjay Health : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால் ஊரடங்கு உத்தரவும் நீடித்துக் கொண்டே செல்கிறது.

நீச்சல் குளத்தில் தாறுமாறாக கவர்ச்சி காட்டும் ஹன்சிகா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

இதனால் மக்கள் யாரும் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களும் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் இருந்து வருகின்றனர்.

தளபதி விஜயின் மகன் வெளிநாட்டில் படித்து வருகிறார். அவரும் சென்னை திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் இதனால் விஜய்யின் குடும்பம் சோகத்தில் இருப்பதாகவும் சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வைரலாகின.

இது குறித்து தற்போது விஜய் தரப்பிலிருந்த கூறப்பட்டிருப்பது என்னவென்றால் சஞ்சய் நலமுடன் பாதுகாப்பாகத் தான் உள்ளார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.