Vijay Birthday Special DP
Vijay Birthday Special DP

தளபதி விஜயின் பிறந்த நாளுக்காக மாஸ்டர் பட தயாரிப்பாளர் புகைப்படம் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Vijay Birthday Special DP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். பிரபல இயக்குனரின் மகனாக திரையுலகில் அடியெடுத்து வைத்தாலும் தன்னுடைய திறமையான நடிப்பாலும் உழைப்பாலும் இன்று உச்ச நடிகையாக வளர்ந்துள்ளார்.

இவருக்கு வரும் ஜூன் 22-ம் தேதி பிறந்த நாள் என்பதால் அதனை கொண்டாட ரசிகர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டினர். ஆனால் தளபதி விஜய் தன்னுடைய பிறந்த நாளில் எவ்வித கொண்டாட்டமும் வேண்டாம் என கூறியுள்ளார்.

விஜய் பிறந்த நாளுக்கு ட்ரீட் இருக்கு.. ஆனால்?? – மாஸ்டர் பட பிரபலம் வைத்த டுவிஸ்ட்!

இருப்பினும் விஜய் ரசிகர்கள் தளபதியின் பிறந்த நாளுக்காக காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடினர்.

இதனையடுத்து தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் தன்னைத் தானே செதுக்கி கொண்டவர் என்பதை கூறும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

https://twitter.com/Lalit_SevenScr/status/1273609205019103233?s=19