Vijay Birthday Celebration in France
Vijay Birthday Celebration in France

விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பிரான்ஸ் நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

Vijay Birthday Celebration in France : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போய் வருகிறது.

இது ஒருபுறமிருக்க வரும் ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளையாவது அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடலாம் என திட்டம் தீட்டி வந்தனர். ஆனால் தன்னுடைய பிறந்த நாளில் எவ்வித கொண்டாட்டமும் தேவை இல்லை அவரவர்களின் உடல் நிலையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார் தளபதி விஜய்.

OTT-ல் ஜகமே தந்திரம் ரிலீஸ்?? இத்தனை கோடிக்கு தான் விலை பேசியதா அமேசான்?? – தயாரிப்பாளரின் முடிவு என்ன?

இதனால் இந்தியாவில் விஜயின் பிறந்த நாளில் எவ்வித கொண்டாட்டமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் விஜயின் பிறந்த நாளில் அவரின் படத்தை திரையிட அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று தியேட்டரில் அன்று ஒரு நாள் விஜயின் பிகில் படத்தை திரையிட பிரான்ஸ் அரசாங்கம் அனுமதி அளித்து இருப்பது அங்குள்ள ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இதனால் பிரான்ஸ் நாட்டில் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.