விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் விஜயகாந்த் அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலிசோடா என்ற படத்தை இயக்கிய விஜய்மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’என்ற படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம்  நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைக்க அச்சு ராஜாமணி பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது என்பதை கேக் கொண்டாடிய படக்குழுவினர் இதனைப்பற்றி இணையதளத்தில் வெளியிட்டு இருந்தனர். தற்போது இந்த படத்தில் விஜயகாந்த் அவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் விஜய் மில்டன் ஊடகம் ஒன்றில் பேசியபோது விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படம் பிடிக்கவில்லை. அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது காட்சிகளை படம் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றும் ஆனால் அவரது காட்சியை கூடிய விரைவில் படம் ஆக்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியிருக்கிறார்.