
Vijay Antony Explain : திமிரு பிடிச்சவன் படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிடுவது ஏன் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகரும் இசையமைப்பாளருமாக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது கணேஷா இயக்கத்தில் திமிரு புடிச்சவன் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் உள்ள பிரசாத் லேப்-பில் நடந்தது. பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது விஜய் ஆண்டனி பேசும் போது இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதற்கான காரணம் என்ன என்பதை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. படத்தை அப்படியே வைத்திருக்கவும் முடியாது. பைரஸி தொல்லைகள் அதிகமாகி விட்டன. அதுமட்டுமில்லாமல் என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்க உள்ளன.
அதனால் தான் தீபாவளிக்கே ரிலீஸ் செய்ய முடிவு செய்ததாக கூறியுளளார்.
விஜய் ஆண்டனி பேசிய வீடியோ :
