விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதை வென்ற விஜய் ஆண்டனி தற்போது முன்னணி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து சினிமா துறையில் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி இருக்கிறார். வித்தியாசமான கதை கலங்களை தேடி நடித்து வரும் இவர் தற்போது கொலை, வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன், ரத்தம், பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

பிச்சைக்காரன் 2… திரைப்படத்தின் புது அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி.!

இதில் சில படங்களின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2016 இல் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்களால் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததால் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு இயக்கி வருகிறது.

பிச்சைக்காரன் 2… திரைப்படத்தின் புது அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி.!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் சாட்டிலைட் & டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை ஸ்டார் நெட்வொர்க் கைப்பற்றி இருப்பதாகவும், பிச்சைக்காரன் 2 திரைப்படம் அடுத்த வருடம் 2023இல் கோடையில் வெளியாகும் என்ற முக்கியமான தகவலை பதிவின் மூலம் அறிவித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.