நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென்று குடும்பப் பிரச்சனை குறித்து கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இசை இசையமைப்பாளராக பிரபலமான விஜய் ஆண்டனி தற்போது முன்னணி ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். தனது இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது தனது நடிப்புத் திறமை மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார். விஜய் ஆண்டனி தற்போது வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன், கொலை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

குடும்ப பிரச்சனையா!!… விஜய் ஆண்டனியின் திடீர் வைரல் ட்வீட்!.

இதற்கிடையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென்று குடும்ப பிரச்சினை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது படுவைரலா பரவி வருகிறது. அதில் அவர், உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க. என்று குறிப்பிட்டு இருக்கிறார்.