நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் கடவுள் என் முன்னாள் வந்தால் நான் இதைத்தான் கேட்பேன் நீங்கள் என்ன கேப்பிங்க என்று பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இசை இசையமைப்பாளராக பிரபலமான விஜய் ஆண்டனி தற்போது முன்னணி ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். தனது இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது தனது நடிப்புத் திறமை மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்.

கடவுள் என் முன்னாடி வந்தால்… இதுதான் என் ரிக்வெஸ்ட்!! - விஜய் ஆண்டனியின் உருக்கமான ட்விட் !.

விஜய் ஆண்டனி தற்போது வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன், கொலை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென்று சமீபத்தில் குடும்ப பிரச்சினை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் அது வைரலானதை தொடர்ந்து தற்போது மீண்டும் கடவுள் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதுவும் வைரலாகி வருகிறது.

கடவுள் என் முன்னாடி வந்தால்… இதுதான் என் ரிக்வெஸ்ட்!! - விஜய் ஆண்டனியின் உருக்கமான ட்விட் !.

அதில் அவர், கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன் இன்று பதிவிட்டிருக்கிறார் மேலும்
நீங்க என்ன கேப்பிங்க? என்ற கேள்வியையும் அனைவரிடமும் கேட்டிருக்கிறார். இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் அதற்கு பதிலளித்து வருகின்றனர்.