வடக்கன் ஏழை மக்கள் குறித்து விஜய் ஆண்டனி பகிர்ந்திருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது கொலை, வள்ளி மயில், பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் போன்ற பல படங்களில் வரிசையாக பிசியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பலமான விபத்தால் தற்போது சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனி தற்போது உடல்நிலை தேறிவரும் நிலையில் எப்போதும் போல் தனது ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகளை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் வடக்கன் பிரச்சனை குறித்து அவர் பகிர்ந்து இருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், “வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும், நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான்”. என பதிவிட்டு “யாதும் ஊரே யாவரும் கேளிர்”. என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். இவரது இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.