பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Vijay Antony Direct Pitchaikaran 2 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக, இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். வசூலிலும் தொலைக்காட்சி டிஆர்பியிலும் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

இதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க.. பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கப்போவது இவர்தான் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஒலிம்பிக் தர்பாரில் 5,000 பதக்கங்கள் ரெடி : கலக்கப் போறது யாரு? :

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இன்று விஜய் ஆண்டனியின் பிறந்த நாள் என்பதால் இந்தப் படத்தின் இயக்குனர் யார் என்பது முருகதாஸ் அறிவிப்பார் என படக்குழு தெரிவித்து இருந்தது.

இந்த 2 வகை ஆண்களில் யாரை Date பண்ணுவீங்க? – Nandita Swetha-வின் விசித்திரமான பதில்! | HD

அதன்படி தற்போது முருகதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி அவர்களே இயக்கி நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தை தயாரிப்பது விஜய் ஆண்டனி தான்.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி தற்போது இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Attachments area