Sarkar Issue & Vijay Reaction

Sarkar Issue & Vijay Reaction : சர்கார் திருட்டு கதை விவகாரம் குறித்து விஜய் என்ன சொன்னார் என இயக்குனர் முருகதாஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதாரவி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் சர்கார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் கதை குறித்த சர்ச்சை முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் சர்கார் கதை காப்பி தான் என்பது போல அறிக்கையை வெளியிட்டு இருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

முருகதாஸும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில் முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் இது குறித்து என்ன சொன்னார் என கேட்டுள்ளனர்.

அதற்கு முருகதாஸ் இது எனக்கு வந்த பிரச்சனை.. இதை நான் தான் எதிர் கொள்ள வேண்டும். இதை விஜய் வரை நான் கொண்டு செல்லவில்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.