Vijay and Vivek :
Vijay and Vivek :

Vijay and Vivek : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தளபதி 63 அப்டேட் : விவேக்கை கோர்த்து விட்ட சந்தோஷ் நாராயணன் – டீவீட்டை நீங்களே பாருங்க.!

குறிப்பாக ஆரம்ப காலக்கட்டங்களில் விஜய்யுடன் பல படங்களில் இணைந்து நடித்த விவேக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் அவருடன் இணைகிறார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியொன்றில் பேசிய விவேக், “ இப்படம் தொடர்பாக விஜய்யை சந்தித்தேன். அவர் என்னிடம் ஒரு வார்த்தைதான் சொன்னார்.

”கலக்கிடுங்கண்ணா” என்பது தான் அது. அவரும் நானும் இப்படத்தின் காமெடி காட்சிகள் மிகச்சிறப்பாக வரவேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறோம்” என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.