Vijay and Vikram in Shankar Movie

ஷங்கர் இயக்கத்தில் விஜய் விக்ரம் விஷால் ஆகியோர் இணைந்து நடிக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்.

Vijay and Vikram in Shankar Movie : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். தற்போது இவரது இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் அதில் தளபதி விஜய், சியான் விக்ரம் மற்றும் விஷால் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது.

இப்படியான நிலையில் தற்போது இது குறித்து பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது ஷங்கர் இயக்கத்தில் விஜய் விக்ரம் விஷால் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் வெறும் கற்பனையே. இது உண்மை அல்ல என கூறியுள்ளார்.

இதனால் இது நாள் வரை ஒரே படத்தில் விக்ரம், விஷால், விஜய் என மூவரும் இணைந்து நடிப்பதாக பரவியது வதந்தி என தெரியவந்துள்ளது.