Vijay and Vetrimaran Story Details

விஜய், வெற்றிமாறன் இணையும் படத்தின் கதை குறித்து தெரிய வந்துள்ளது.

Vijay and Vetrimaran Story Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாக படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழகத்தில், அக்டோபர் 4-ந்தேதி தேர்தல் : ஆணையம் அறிவிப்பு

மேலும் அதன் பின்னர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதை குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது Shoes Of The Dead என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆறுமாசம் கழிச்சு வச்சு செய்யுங்க! – Actor Vijay Antony Emotional Speech | Kodiyil Oruvan Press Meet

அதாவது ஒரு விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள அவருடைய மனைவி நஷ்டஈடு கேட்டு போராட அரசு அலுவலர்கள் அவரது கோரிக்கையை தொடர்ந்து நிராகரிக்கின்றனர். இதனால் இறந்து போன விவசாயின் தம்பி எதிர்த்து நீதி பெறுகிறார். இதுதான் இந்தப் படத்தின் கதை என கூறப்படுகிறது.

விவசாயத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம் என்பதால் இந்த படம் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.