நாளைக்கு பிரியாணி பண்ண போறேன்னு சொன்னா போதும் என விஜய் குறித்து பேசியுள்ளார் சங்கீதா.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த படத்துக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் மற்றும் சங்கீதா என இருவரும் சேர்ந்து அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழைய வீடியோவாக இருந்தாலும் இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

காரணம் இதில் சங்கீதா இட்லி சமைத்திருக்க சாப்பிட உட்காரும் விஜய் இட்லியா என கேட்டுவிட்டு பிறகு தோசை சாப்பிட வேண்டும் போல இருக்கு என தனக்குத்தானே தோசை ஊற்றிக் கொள்கிறார். பிறகு சங்கீதா தோசைனா நல்லா சாப்பிடுவாரு, அதே மாதிரி நாளைக்கு பிரியாணி செய்ய போறேனு சொன்னால் இன்னைக்கு நைட்ல இருந்தே வயித்தை காலியா வச்சுப்பாரு என தெரிவித்துள்ளார்.

மேலும் ஈவினிங் 6 அல்லது 7 மணிக்கு எப்பவும் குடும்பத்தோட டைம் ஸ்பென்ட் பண்ணுவாரு எனவும் தெரிவித்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

https://twitter.com/PeaceBrwVJ/status/1639958578453790720?t=1MmPRU64pzoMmCNqDc1ANQ&s=19