Vijay and Prashanth
Vijay and Prashanth

Vijay and Prashanth :  90-களில் தமிழ் சினிமாவின் காதல் இளவரசனாக இருந்தவர் பிரஷாந்த்.

இடையில் சில பெர்சனல் காரணங்களால் சினிமாவை விட்டு விலகியிருந்த பிரஷாந்த், தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் உற்சாகத்துடன் நடித்து வருகிறார்.

அந்தவகையில் ஜானி படத்தை தொடர்ந்து தியாகராஜன் தயாரிப்பில் அவர் நடிக்கும் படம் சேலஞ்ஜ்.

அஜித்தின் 60 & 61-வது படங்களை இயக்குவது இவர்கள்தான் – உறுதியான தகவல்!

இதில் அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா அனுகீர்த்திவாஸ் நடிக்கிறார். ஜீன்ஸ் படத்தில் உலக அழகியுடன் நடித்தது போல இந்தமுறை மிஸ் இந்தியாவுடன் பிரஷாந்த் ஜோடி சேருகிறார்.

பிரசாந்த் நடித்த சாக்லெட் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் விஜய் நடிப்பில் பகவதி படத்தை இயக்கியவர் என்பது கூடுதல் ஸ்பெஷல்.

சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் டைட்டில் இதுதான் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், நாசர், சாயாஜி ஷிண்டே, நரேன், சுப்பு பஞ்சு, மாரிமுத்து, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

Vijay and Prashanth
Vijay and Prashanth
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.