Vijay and pon Radhakrishnan : Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, BIgil Audio Launch, Atlee, AR.Rahman, Kollywood, Tamil cinema

Vijay and pon Radhakrishnan :

சென்னை: நடிகர் விஜய் இந்நாட்டின் குடிமகன் என்பதால் அவருக்கு அரசியல் பேச எல்லா உரிமையும் உண்டு என முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்குவது ரத்து செய்யப்பட்டது தொடர்பாக காஞ்சிபுரத்தில் விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அவ்வாறு நடைபெற்ற விளக்கக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது, ‘அரசியலில் உண்மையான கருத்துக்களை யார் கூறினாலும் அதனை நான் வரவேற்பேன்.. மேலும், உண்மைக்கு புறம்பாக கருத்து தெரிவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி – அதிர்ச்சி தகவல்.!

மேலும் நடிகர் விஜய் அரசியல் பேசியதை குறித்து கருத்து தெரிவிக்கையில், நடிகர் விஜயை பொறுத்தவரை அவர் இந்நாட்டின் குடிமகன் என்பதால், தாராளமாக அரசியல் பேச அவருக்கு உரிமைகள் உண்டு என கூறினார். மேலும் உண்மையாக பேசவில்லை என்றால் அவரது மனசாட்சி உறுத்தும் எனப் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கீழடி அகழாய்வை மத்திய அரசு நிறுத்தப் பார்த்ததாக சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர், ஆனால் கீழடிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து என்னென்ன உதவிகளை செய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என உறுதியளித்தார். உலகில் நாம் எங்கு வாழ்ந்தாலும் சரி, அங்கிருக்கக் கூடிய அரசுக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

மேலும் இடைத்தேர்தல் குறித்து பேசுகையில், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது மற்றும் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு தலைமை தான் முடிவு செய்யும் எனக் கூறினார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.