Vijay and Lokesh Kanagaraj Meeting
Vijay and Lokesh Kanagaraj Meeting

விஜய், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சந்தித்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay and Lokesh Kanagaraj Meeting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

தளபதி விஜயின் அறுபத்தி நான்காவது படமான இந்த படத்தை கைதி, மாநகரம் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மார்ச் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளி போய் உள்ளது.

செப்டம்பர் முதல் திறக்கப்படும் சினிமா தியேட்டர்கள்..? ஆனால் இதெல்லாம் கண்டிப்பா பின்பற்றனும் – வெளியான முக்கிய விதிமுறைகள்

இந்த நிலையில் தற்போது அனைத்துப் பணிகளையும் முடித்து விட்ட லோகேஷ் இதுதான் பைனல் கட் என படத்தை விஜய்க்கு போட்டு காண்பிப்பதற்காக நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பைனல் எடிட்டிங்கை பார்த்து தளபதி விஜய் ஓகே என கூறி விட்டால் மாஸ்டர் வேலைகள் மொத்தமும் முடிந்தது. பின்னர் லோகேஷ் அவருடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் பைனல் கட்டை பார்த்து தளபதி விஜய் என்ன சொல்ல போகிறார் என லோகேஷ் கனகராஜ் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். விஜய் ரசிகர்களும் தான்.