Vijay and Atlee Upcoming Movie Title

விஜயுடன் எப்ப இணைந்தாலும் இதுதான் பட டைட்டில் என்பதுபோல அட்லி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Vijay and Atlee Upcoming Movie Title : தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி திரைப்படத்திற்குப் பிறகு தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார்.

இந்த மூன்று படங்களும் இன்னொரு படத்தின் காப்பி என விமர்சனங்கள் எழுந்து இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அட்லி மீண்டும் விஜயுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் தெறி திரைப்படம் வெளியாகி ஐந்து வருடம் ஆகிவிட்டதை அட்லி மிகவும் உற்சாகமாக கொண்டாடினார். அப்படத்தில் நடித்த அனைவருக்கும் தனித்தனியாக சமூக வலைதளப் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார். இதுகுறித்து தமன் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் மீண்டும் விஜயுடன் பணியாற்ற ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தமனின் இந்த பதிவை பார்த்த அட்லி நிச்சயம் விரைவில் நடக்கும் என கூறியுள்ளார். மேலும் தமன் இந்த பதிவில் வெயிட்டிங் வெறி என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ அடுத்த படத்தின் டைட்டில் வெறி தானா என கமெண்ட்டுகளில் கேட்டு வருகின்றனர்.