நான்காவது முறையாக தளபதி விஜயுடன் அட்லி கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay And Atlee Combo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த அட்லியுடன் நான்காவது முறையாக இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஷாருக்கானை வைத்து படத்தை இயக்கி வரும் அட்லி அடுத்ததாக விஜய் ஏஜிஎஸ் கூட்டணியில் படத்தை இயக்க முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் ஷாருக்கான் நடிக்கும் படத்தை முழுமையாக முடித்த பிறகே இந்த படத்தின் வேலைகள் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது.

ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்திற்கு செல்லுமா? அட்லி விஜய் மற்றும் ஏஜிஎஸ் என பிகில் கூட்டணி மீண்டும் அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.