விஜயுடன் இணைந்து நடிக்க அஜித் ஓகே சொல்லிவிட்டதாகவும் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென்னிந்திய சினிமாவில் இருபெரும் துருவங்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

விஜயுடன் இணைந்து நடிக்க ஓகே சொன்ன அஜித்‌.. விறுவிறுப்பாக நடக்கும் பட வேலைகள் - இயக்குனர் யார் தெரியுமா??

தற்போது இருவரும் மிகப்பெரிய நடிகர்களாக மாபெரும் ரசிகர் பட்டாளத்தோடு இருந்து வரும் நிலையில் இவர்களையும் ஒன்றிணைத்து படம் இயக்குவது என்பது சவாலான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் நிச்சயம் அஜித் மற்றும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என வெங்கட் பிரபு கூறி இருந்தார்.

மங்காத்தா படத்தின் கதையைக் கேட்டபோது விஜய் இந்த கதையை என்னிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் நான் நடித்திருப்பேன் எனக் கூறியிருந்த நிலையில் அஜித்துடன் இணைந்து நடிப்பது குறித்து வெங்கட் பிரபு விஜய்யிடம் கேட்க அவர் இந்த ஐடியாவுக்கு ஓகே சொன்னதாக சொல்லப்பட்டது.

விஜயுடன் இணைந்து நடிக்க ஓகே சொன்ன அஜித்‌.. விறுவிறுப்பாக நடக்கும் பட வேலைகள் - இயக்குனர் யார் தெரியுமா??

இப்படியான நிலையில் அஜித்திடம் படத்தின் கதையை விளக்க அஜித்துக்கும் கதை பிடித்து போய் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அஜித் மற்றும் விஜய்யை வைத்து வெங்கட் பிரபு ஒரு படத்தை இயக்குவார். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒரே படத்தில் அஜித் மற்றும் விஜயை பார்க்க இரண்டு தரப்பு ரசிகர்களும் ஆவலோடு இருப்பதாக கூறி வருகின்றனர்.