விஜய் கொடுத்த அட்வைஸ் குறித்து வானத்தைப்போல சீரியல் தமன் குமார் பேசியுள்ளார்.

Vijay Advice to Taman Kumar : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் வானத்தை போல. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு இந்த சீரியலின் கதை நகர்ந்து வருகிறது. இதில் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தமன் குமார். சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார்.

விஜய் கொடுத்த அட்வைஸ்.. வானத்தைப்போல சீரியல் அண்ணன் சொன்ன சீக்ரெட்ஸ்.!!

இவரது நடிப்பில் அடுத்ததாக கண்மணி பாப்பா, யாழி இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. கண்மணி பாப்பா என்ற திரைப்படம் திகில் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஐடி துறையில் பணியாற்றி வந்த தமிழ் குமார் சினிமா மீது கொண்ட காதலால் இந்த தொழிலை விட்டுவிட்டு தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் விஜய் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துள்ளார். எப்போது தமன் குமார் சண்டைக் காட்சியில் நடித்தபோது அவருக்கு அடிபட்டுள்ளது. சண்டைக் காட்சியில் நடிக்கும் போது கூடுதல் கவனம் தேவை என விஜய் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

இந்த படம் ரிலீஸானபோது தளபதி விஜய் தன்னுடைய நடிப்பை பாராட்டியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் தமன் குமார்.