தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ், வரலஷ்மி சரத்குமார், ராதா ரவி, பழ. கருப்பையா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் தளபதி விஜய் நெகடிவ் ரோலில் நடிப்பதாக தகவல்கள் கிடைத்து இருந்தது. அதனை ராதா ரவி அளித்திருந்த பேட்டி ஒன்றிலும் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

தளபதி விஜய் அமெரிக்காவில் இருக்கும் போது தமிழகத்தை பற்றியும் இந்தியாவை பற்றியும் நெகடிவ் மைண்டில் தான் இருப்பாராம்.

பின்னர் அரசியலில் ஈடுபடும் போதும் மக்களுக்கு பிடிக்காத ராட்சசனாக தான் இருப்பார். அதன் பின்னர் தான் அவரது ஹீரோயிசம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும்.

மேலும் சர்கார் பார்ப்போர்களை சீட் நுனியில் அமர வைக்கும் படி இப்படத்தின் திரைக்கதை உருவாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here