சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
Vijay About Election Time Incident : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் போனது. அதற்கு பதிலாக தளபதி விஜய் சன் டிவியில் பேட்டி ஒன்றைக் கொடுக்க அந்தப் பேட்டி நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்தப் பேட்டியில் தளபதி விஜயிடம் தேடி பற்றி சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் எனக் கேட்கப்பட்டது. காரில் போட்டு போட தான் கிளம்பிக் கொண்டிருந்தேன். எலெக்ஷன் பூத் எங்க வீட்டுக்கு பின்னாடி தான் இருக்கு. கிளம்பும் நேரத்தில் சைக்கிளை பார்த்ததில் எனக்கு பள்ளிப்பருவம் ஞாபகத்துக்கு வந்தது அதனால் சைக்கிளில் சென்று ஓட்டு போடலாம் என கிளம்பிவிட்டேன்.

வீடியோ எல்லாம் பார்த்த என்னுடைய மகன் வீட்டுக்குப் போனதும் சைக்கிளுக்கு ஒன்னும் ஆகலையே என கேட்டார். விஜய் அளித்த இந்தப் பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.