Vijay in Coke Ad

கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்தது ஏன் என விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

Vijay About Coco Cola Ad : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் விஜய் பல்வேறு தடைகளையும் துன்பங்களையும் கடந்து தான் இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் இவர் சில விளம்பர படங்களில் நடித்திருந்தார். அதிலும் குறிப்பாக கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொக்கோகோலா நல்லது என விளம்பரத்தில் நடித்து விட்டு அதன் பின்னர் இது விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்படுத்துவதாக கத்தி படத்தில் டயலாக் பேசி இருந்தார். இதுதான் விஜய்க்கு சிக்கலாக அமைந்தது.

விஜய் பொண்டாட்டியையும் சூர்யா பொண்டாட்டியையும் தே*** னு சொல்லுவேன் – மீரா மிதுன் வெளியிட்ட சர்ச்சை வீடியோ

இதுகுறித்து பல வருடங்களுக்கு முன்பு தன்னுடைய ரசிகர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்தபோது விளக்கமளித்துள்ளார்.

கொக்கோ கோலா விளம்பரத்தில் நடித்தது நான் தெரியாமல் செய்த தவறு. கத்தி படத்தின் கதையை கேட்டதுமே எனக்கு அது புரிந்தது. செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாகவே இப்படத்தில் நடித்தேன். தவறை திருத்திக் கொள்பவன் தான் மனிதன் என கூறியுள்ளார்.

விஜயின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் தான் செய்தது தவறு என ஒப்புக் கொள்வதற்கே ஒரு பெரிய மனசு வேண்டும், அது உங்களிடம் இருக்கும் என அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் இனிமேல் இது போன்று எந்த ஒரு விளம்பரத்தையும் நடிக்க மாட்டேன் எனவும் இதை அப்போதே வாக்கு கொடுத்துள்ளார். அதன்படி அவர் இன்று வரை இது போன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.