Vijay About Coco Cola Ad

அப்போ Coco Cola விளம்பரத்தில் நடித்து விட்டு இப்போ அதை எதிர்க்கவில்லை என ரசிகர்கள் கேள்வி கேட்டதற்கு விஜய் கொடுத்த பதில் என்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

Vijay About Coco Cola Ad : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் எவ்வளவு வசூல் செய்ய போகிறது? என்னென்ன சாதனைகள் படைக்க போகிறது என்பதை அறிந்து கொள்ளவும் அதனை கொண்டாடவும் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இப்படியான நிலையில் தளபதி விஜய் பல வருடங்களுக்கு முன்பு ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் சமூக வலைதளங்களில் திடீரென வைரலாக தொடங்கியுள்ளது.

அதாவது தளபதி விஜய் பல வருடங்களுக்கு முன்பு ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் Coca cola விளம்பரத்தில் நடித்து விட்டு இப்போ அதை எதிர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு தளபதி விஜய் நானும் செய்த தவறை திருத்திக் கொள்ளும் சாதாரண மனிதன் தான். கத்தி பட கதையை கேட்ட பிறகுதான் அதை நான் உணர்ந்து கொண்டேன்.

அதனால்தான் ஜீவா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினேன் என தெரிவித்துள்ளார்.