Vijay 66 Movie Latest Updates
Vijay 66 Movie Latest Updates

தளபதி 66 படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Vijay 66 Movie Latest Updates : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.

விஜய் படத்தை இயக்கிய மிஷ்கின்.. இவரால் ஹிட்டான பாடல் – இந்த விசயம் தெரியுமா?

மேலும் இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் புதிய ஸ்கிரிப்ட் என தெரியவந்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 66 படம் பற்றிய அப்டேட்டும் தற்போது கிடைத்துள்ளது. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதையில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு கிராமிய இசைக்கு கச்சிதமான இமான் இசையமைக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

மெர்சல் படத்தில் விட்டதை எல்லாம் பிடிப்பதற்கு தற்போது இந்த சூப்பரான கூட்டணி அமைய இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.