தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Vijay 66 Movie Heroine Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போவது இவர் தான்?? வெளியானது அதிரடி தகவல்.!!
17-ந்தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தான் அணி சீருடையால் சர்ச்சை

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கிறார். இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தினை தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு எஸ்எஸ் தமன் இசையமைக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

நாம எப்பவும் வாயிலே வண்டி ஓட்டுற ஆளு ! – Actor Manobala Funny Speech | | Aranmani 3 Press Meet

இந்த நிலையில் தற்போது இந்த தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடிகை கீர்த்தி சுரேஷுடன் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.