Thalapathy-65
தளபதி 65 இயக்குனர் இவங்களா? அவங்களா? என்பதை எல்லாம் ஓரம் வைங்க.. இந்த படத்தை தயாரிக்க போவது யார் என்பது உறுதியாகி விட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வரும் திரைப்படம் விஜய் 64. லோகேஷ் இயக்கி வரும் இந்த படத்தை தொடர்ந்து விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருந்து வருகிறது.

வெற்றிமாறன், மகிழ்திருமேனி, அட்லீ, பேரரசு என பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் முருகதாஸுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக நேற்று கூறியிருந்தோம்.

காரணம் வெற்றிமாறன் சூர்யாவை இயக்க போகிறார், மகிழ் திருமேனி உதயநிதியை இயக்க ஒப்பந்தமாகி விட்டார். அட்லீக்கும் மீண்டும் ஒரு படம் என்பது வாய்ப்பில்லை என கூறியிருந்தோம்.

மேலும் முருகதாஸ் விஜயை சந்தித்து ஒன் லைன் ஸ்டோரி ஒன்றை கூறி இருப்பதாகவும் தர்பார் படத்திற்கு பிறகு முருகதாஸ் ப்ரீ என்பதாலும் அவர் தான் விஜயின் அடுத்த பட இயக்குனராக இருப்பார் என குறிப்பிட்டு இருந்தோம்.

தற்போது இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்பது உறுதியாகியுள்ளது, மேலும் வெகு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளது.

அந்த அறிவிப்பு இயக்குனர் யார் என்பதை குறிப்பிடாமல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் 44 படத்தின் அப்டேட்டும் அப்படி தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.