Vijay 65 Movie Director
ஹிட் படத்தின் இரண்டாம் பாக கதை கேட்டு விஜய் ஓகே சொல்லி விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Vijay 65 Movie Director : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் பட பீவரை விட அடுத்த இயக்குனர் யாராக இருக்கும் என்பது தான் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

ஏற்கனவே தளபதி 65-ஐ இவர் தான் இயக்குகிறார், அவர் தான் இயக்குகிறார் என பலரின் பெயர்கள் அடிபட்டு வந்தது.

விஜய் மகனுக்கு கதை ரெடி.. விஜயை வைத்து மாஸ் காட்டிய இயக்குனர் அதிரடி – அப்போ செம ஹிட் இருக்கு??

குறிப்பாக அடுத்த படத்தை இயக்க போவது சுதா கொங்கரா தான், இது உறுதியாகி விட்டது என்றெல்லாம் அழுத்தமாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் சுதா கொங்கரா சிம்புவுடன் இணைகிறார் என தற்போது தகவல்கள் வைரலாகி வரும் நிலையில் விஜயின் அடுத்த இயக்குனர் பற்றிய பேச்சும் மீண்டும் கிளம்ப தொடங்கியுள்ளது.

இயக்குனர் முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2 படத்தின் கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த முறை அது இல்ல.. மாஸ்டர் இசை வெளியீடு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் – சோகத்தில் ரசிகர்கள்.!

இதனை விஜயிடம் கூற கதை மாஸாக இருப்பதால் தளபதியும் க்ரீன் சிக்னல் காட்டி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனால் விஜயின் அடுத்த படம் முருகதாஸ் உடன் தான் அது துப்பாக்கி 2 தான் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது, உண்மையை அறிய அதிகாரபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.