Vijay 64 Movie Heroine Details Revealed - Shocking Update.! | Thalapathy 64 Movie Heroine | Thalapathy Vijay | Kollywood Cinema news | Tamil Cinema News
தளபதி 64 படத்தின் நாயகி குறித்த எதிர்பார்ப்பு ஏமாற்றமானது. ஆம் தளபதி 64 படத்தின் நாயகி கியாரே அத்வானி இல்லையாம்.

Vijay 64 Movie Heroine : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார். பிரிட்டோ தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரே அத்வானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி வந்தன, ஆனால் தற்போது அதுவும் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.

ஆம், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகையும் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் தான் நடிக்க உள்ளாராம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.

மாளவிகா மோகனன் தொடர்ந்து சமூக வளையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Malavika Mohanan
Malavika Mohanan