
Vijay 64 Directors :
Vijay 64 Directors : மாநகரம் இயக்குனரை தொடர்ந்து மீண்டும் ஒரு இயக்குனர் விஜயை சந்தித்து கதை கூறி ஓகே வாங்கியுள்ளார்.
முடியாத நிலையிலும் சாதிக்கும் தளபதி? – லீக்கான தளபதி 63 கிளைமேக்ஸ்.!
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து விஜயை யார் இயங்குவார்கள் என்பது தான் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.
மோகன் ராஜா, மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கதை சொல்லி இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து தற்போது புது தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது.
பாடகரும் கனா படத்தின் இயக்குனருமான அருண் ராஜா காமராஜா விஜயை சந்தித்து மீனவர்கள் சம்மந்தமான கதை ஒன்றை கூற அதுவும் நல்லா இருக்கு என ஓகே சொல்லி உள்ளார்.
இதனால் அடுத்தடுத்து இவர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது . இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.