Vijay-64-Director | Thalapathy 64 Director | Thalapathy Vijay

Vijay 64 Director : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

உங்க கிட்ட இருந்து ஒரு கதை கிடைச்சுடுச்சு, காப்பி ரைட் பண்ணிடாதீங்க விஜய் – மோகன் ராஜா ட்வீட்.!

இந்த படத்தை யார் இயக்குவார் என மிகப்பெரிய கேள்வி நிலவிவரும் நிலையில் இப்படத்தை மோகன் ராஜா இயக்கபோவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க மோகன் ராஜா திட்டமிட்டிருந்தார்.

இது ஜெயம்ரவியின் 25-வது படமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென அந்த படத்திற்கு பதிலாக லக்ஷ்மன் இயக்கும் படம்தான் ஜெயம் ரவியின் 25-வது படம் என்று அறிவிக்கப்பட்டது.

இதை வைத்து பார்க்கும்போது மோகன் ராஜா தற்போது விஜய் படத்திற்கான கதையில் தீவிரம் அடைந்திருப்பதாகவும் அதனால் தான் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விஜய்யின் அடுத்த மூன்று படங்களில் ஒன்று என் படம் என மோகன் ராஜா ஏற்கனவே ஒரு முறை கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.