Thalapathy 63

Vijay 63 Update : தளபதி 63 படத்தின் அடுத்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் திக்கு முக்காட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்திருந்தார். கடந்ந தீபாவளி இப்படம் வெளியாகி மெகா ஹிட் அடித்தது.

இதனையடுத்து விஜய் தற்போது AGS நிறுவனத்தின் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விளையாட்டை மையமாக கொண்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்டர் டிசைனர் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை.

தளபதி விஜயின் மெர்சல், சர்கார், கத்தி, தெறி, தல அஜித்தின் விவேகம் என பல படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்த கோபி பிரசன்னா தான்.

இவர் தற்போது தளபதி விஜயின் படத்தில் 5-வது முறையாக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.