Vijay 63 Update

Vijay 63 Update : விஜய் 63 படத்தில் ரசிகர்களை கவர்ந்த மேஜிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, ஆனாலும் அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

அடடே இவனா?? தளபதி 63-ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் – சும்மா அதிர போகுது.!

மேலும் நயன்தாரா, பரியேறும் பெருமாள் கதிர், யோகி பாபு, ஆனந்த ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மெர்சல், சர்க்கார் ஆகிய படங்களுக்கு பாடல் எழுதிய விவேக் தான் இப்படத்திற்கும் பாடல் எழுத ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் இப்படத்தின் அறிமுக பாடலை சர்கார் படத்தின் சிமிட்டான்காரன் பாடலை பாடிய பம்பா பாக்யாவே பாட உள்ளார்.

ஆனால் சிமிட்டான்காரன் பாடலை போல முழுமையாக பாடவில்லையாம். ஒரே ஒரு ஸ்டேன்சா மட்டும் தான் படியுள்ளாராம். அதுவும் படத்தில் இடம் பெறுமா? என்பது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ரஹ்மான், விவேக், பம்பா என சர்கார் படத்தின் மேஜிக் கூட்டணி மீண்டும் இணைந்தும் இப்படி ஆகிடுச்சே என ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.