Thalapathy 63

Vijay 63 Title :  தளபதி 63 படத்திற்கு மைக்கேல் என பெயர் வைக்க காரணம் என்ன என்பது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி என பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்திற்கு மைக்கேல் என பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன. அதுவே உண்மையா என உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது மேலும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது ஹிந்தியில் கேல் என்றால் விளையாட்டு என்று பொருள். இதுவும் விளையாட்டு சம்மந்தமான படம் என்பதால் தான் அட்லீ இந்த டைட்டிலை தேர்வு செய்ததாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

இது உண்மையா? அல்லது வதந்தியா? என்பதெல்லாம் சரியான அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.