Thalapathy 63 Release

Vijay 63 Release : தளபதி 63 திரைப்படம் ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என கசிந்திருந்த தகவலுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அஜித் படத்தில் இருந்து திடீரென விலகிய வினோத்? அப்போ தல 60?

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என ஆரம்பத்திலேயே அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால் படத்தையும் முன் கூட்டியே ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆளப்போறான் தமிழனை தொடர்ந்து ஆள வருகிறார் நம்மவர் சத்யா – மெர்சலாக்கும் தாதா 87 போஸ்டர்.!

இது குறித்து தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருப்பதாவது, படம் ஆகஸ்ட் மாதமே வெளியாக உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை. ஏற்கனவே அறிவித்திருந்தபடி இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.