Thalapathy-63 Overseas Business

Vijay 63 Overseas Business : தளபதி 63 படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம் குறித்த தகவல்கள் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

அட்லீ இயக்க ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் பரியேறும் பெருமாள் கதிர், மேயாத மான் இந்துஜா, விவேக், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமாக முடியவடைய இன்னும் 50 நாட்கள் படப்பிடிப்புகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ரிலீசுக்கு முன்பே இப்படத்தின் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஓவர்சீஸ் வியாபாரம் ரூ 30 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here