Vijay 63 Update

Vijay 63 Movie Update : தளபதி 63 படத்தின் கதை எப்படி இருக்கும்? எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்ற தகவல்கள் அட்லீ தரப்பில் இருந்து கசிந்துள்ளதாக தகவல் ஒன்று வைரலாகத் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் தளபதியான விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 63 படத்தை இயக்க உள்ளார்.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

தற்போது இப்படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இப்படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாக இருப்பதாக கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே கபடி, கிரிக்கெட் போன்றவற்றை மையமாக வைத்து நிறைய படங்கள் வெளியாகி விட்டதால் வேறொரு விளையாட்டை மையமாக கொண்டு தான் இப்படம் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் அது என்ன விளையாட்டாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.