Vijay 63 First Look Poster Release Date - Celebrity's Twist | Thalapathy 63 | Thalapathy 63 First Look | Thalapathy Vijay
தளபதி 63 படத்தின் முக்கிய பிரபலம் பதிவிட்ட டீவீட்டை பார்த்த நெட்டிசன்கள் விஜய் 63 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இது தானோ என கொண்டாடி வருகின்றனர்.

Vijay 63 First Look : தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பாடலாசிரியர் விவேக் ட்வீட் ஒன்றை பதிவிட்டு ரசிகர்ளை கொண்டாட வைத்துள்ளார்.

அதாவது அந்த டீவீட்டில் வெறும் 30 என்றுள்ள போட்டோவை பதிவிட்டு தளபதி 63 என டீவீட்டியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தளபதி 63 பர்ஸ்ட் லுக் மே 30-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர்.

சிலர் இன்னும் 30 நாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனவும் அல்லது மே 30-ல் தளபதி 64 அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர்.

விவேக் பதிவிட்ட ட்வீட் எந்த நோக்கத்தில் பதிவிட்டது என்பது அவருக்கு தான் தெரியும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.